×
Saravana Stores

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

சிவகாசி, ஏப். 28: சிவகாசி லிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாலைக்கனி (35). இவருக்கு நாகஜோதி (31) என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கம் உள்ள மாலைக்கனி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாலைக்கனி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பிய நாகஜோதி கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Malakani ,Sivakasi Lingapuram Colony ,Nagajyoti ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...