×

கம்பத்தில் ஆசிரியர் கூட்டணி நலநிதி விழா

கூடலூர், ஏப்.28: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கம்பம் வட்டாரக் கிளை, கம்பம் நகர்கிளை சார்பாக நலநிதி விழா, கம்பத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். நகர அமைப்பாளர் ஜீவா, வட்டார செயலாளர் ரமேஷ் கலந்துகொண்டனர். கிளை பொருளாளர் மல்லிகா மாவட்டத் துணைச் செயலாளர் ராகவன் மாவட்ட பொருளாளர் சுருளியம்மாள் மாநில செயற்குழு உறுப்பினர் ராமர், தமுஎகச மாவட்ட செயலாளர் தமிழ்மணி, கள்ளர் பள்ளிகிளை மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் தீனன் வாழ்த்திப் பேசினர்.

இதைத் தொடர்ந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நலநிதி வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில், அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப வேண்டும், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும் முன் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

The post கம்பத்தில் ஆசிரியர் கூட்டணி நலநிதி விழா appeared first on Dinakaran.

Tags : Teacher's Alliance Welfare Fund Festival ,Gamba ,Kudalur ,Tamil Nadu Primary School Teachers' Alliance Kampam District Branch ,Kampam Nagar Branch ,Kampam ,President ,Muthukaruppan ,Jeeva ,Ramesh ,Teachers' Alliance Welfare Fund Festival ,Gampa ,Dinakaran ,
× RELATED சாலையில் சரிந்த மூங்கில் புதர்கள் அகற்றம்: பாதுகாப்பை அதிகரிக்க கோரிக்கை