- பெருகமணி
- திருச்சி
- ரஞ்சிதா
- ரோஷினி
- சாய் லட்சுமி
- ஷாலினி
- சிந்து
- சுஜிதா ரீ
- சன்மதி
- சுமிப்ரீதி
- தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- செந்தில்குமார்
திருச்சி, ஏப். 28: திருச்சி அருகே உள்ள பெருகமணியில் செந்தில் குமார் என்ற தென்னை விவசாயியை தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவிகள் ரஞ்சிதா, ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து, சுஜிதா ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைத்தீஸ்வரி ஆகியோர் சந்தித்து அவரின் தோட்டத்தில் தென்னை டானிக் செயல் முறை விளக்கம் அளித்தனர். தென்னையில் ஊட்டச்சத்து குறைபாடு, சரியான நேரத்தில் ஊட்டச்சத்து கிடைக்காதது, வறட்சி போன்ற காரணங்களால் குரும்பை உதிர்வு ஏற்படும். இதை கையாளுவதற்கு தென்னை டானிக் பயன்படுத்தலாம் மற்றும் அதிக மகசூல் பெறவும் உதவும்.
இவ்வாறு தென்னை டானிக் பயன்களையும், அதை செய்முறை செய்து எடுத்துரைத்தனர். செய்முறை விளக்கம்: மரத்தில் இருந்து இரண்டரை அடி இடைவெளி விட்டு பென்சில் தடிமன் உள்ள இளஞ்சிவப்பு நிற வேரை தேர்வு செய்து நுனியில் வெட்டி விட வேண்டும். ஒரு லிட்டர் அடர் டானிக்கை 4 லிட்டர் நீரில் கலந்து ஒரு மரத்திற்கு 200 மி.லி. என்ற அளவில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஊற்றி காற்று புகாத அளவில் கட்டி விடவேண்டும்.
The post திருச்சி அருகே பெருகமணியில் வேளாண். மாணவிகள் தென்னை டானிக் செயல் முறை விளக்கம் appeared first on Dinakaran.