×

லால்குடி அருகே மீன் பிடிப்பதில் தகராறு: முன் விரோதத்தில் நண்பரை வெட்டிய 3 பேர் கைது

லால்குடி, ஏப். 28: லால்குடி அருகே மீன் பிடிப்பது தொடர்பான முன்விரோதத்தில் நண்பரை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வெங்கடேஷ் (21), கஞ்சா வியாபாரி. அதேபோல், லால்குடி அருகே பச்சாம்பேட்டை மனோஜ், பூவாளூரைச் சேர்ந்தவர்களான முகேஷ், பிரேம் மற்றும் தமிழ்மாறன் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது, மீன் பிடிப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன் பிடித்த போது இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், மனோஜ், முகேஷ், பிரேம், தமிழ்மாறன் ஆகியோர் நேற்று காலை வெங்கடேசிடம் செல்போனில் நைசாக பேசி அவரை பூவாளூர் மார்க்கெட் பகுதிக்கு வருமாறு அழைத்தனர். அப்போது, அங்கு வந்த வெங்கடேசை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை மற்றும் கையில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை அரிவாளால் வெட்டிய மனோஜ், முகேஷ், தமிழ்மாறன் ஆகியோரை கைது செய்தனர்.

The post லால்குடி அருகே மீன் பிடிப்பதில் தகராறு: முன் விரோதத்தில் நண்பரை வெட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Lalgudi ,Venkatesh ,Sundaramurthy ,Poovalur Periyar Street ,Lalgudi, Trichy district ,
× RELATED திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்