- தஞ்சாவூர் கைவினைப்பொருள் தயாரிக்கும் பயிற்சி முகாம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழு
- தஞ்சாவூர் மாவட்டம்
- தீபக் ஜேக்கப்
- தஞ்சாவூர் கைவினை கலைப்பொருட்கள்
- தஞ்சாவூர் அருங்காட்சியகம்
- தின மலர்
தஞ்சாவூர்,ஏப்.28:தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் தஞ்சாவூர் கைவினைக் கலைப்பொருள் செய்முறை விளக்க நிகழ்வு தஞ்சாவூர் அருங்காட்சியாக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதும், அதற்கான ஆதரவினை ஊக்குவிக்க செய்வதும்தான் இப்பயிற்சியின் நோக்கமாகும்.
இப்பயிற்சியினை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கலைஞர்கள் பாலு மற்றும் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை 75க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் தலையாட்டி பொம்மையை அவர்களே செய்து வண்ணம் தீட்டினர். கோடை விடுமுறையில் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றது மனநிறைவாகவும், ஆர்வத்தை தூண்டும் வண்ணமாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக பங்கேற்ற அனைவரும் தெரிவித்தனர். நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் செல்வம், தஞ்சை தாரகைகள் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள் செய்முறை பயிற்சி முகாம்: சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.