பெரம்பலூர்,ஏப்.28: அடுத்த நான்கு நாட்களுக்கு மிக மிக அதிகமாக வெப்பம் தாக்கக் கூடும் என்பதால் ”மஞ்சள் அலார்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்டம்- உச்சி வெயில் சமயங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பாண்டு மிக மிக அதிகப் பட்சமாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இதன் படி தமிழக அளவில் ஒரே சமயத்தில் அதிகப்படியான மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் வெப்பஅலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக அடுத்து வரும் நான்கு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்தியவானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரம்பலூர், அரியலூர் மாவட்ட மக் களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மழையை நம்பியும், கிணற்றுப்பாசனத்தை நம்பியும், விவசாயம் செய்யக்கூடிய மானாவாரி சாகுபடியாளர்களைக் கொண்ட மிகவும் வறண்ட மாவட்டமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாட்டு ஏற்கனவே மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து, தினமும் சதமடித்தபடி 100 டிகிரிக்கு மேலாகவே வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நடப்பாண்டு வரலாறு காணாதபடிக்கு கடுமை யான வெப்பக்காற்று வீசி வருவதால் சிறியளவில் தண்ணீர் தேங்கிக் கிடந்த குளம், குட்டைகள் கூட வற்றிக் காய்ந்துகிடக்கின்றன.
இதனால் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்து சாலைகளில் இருசக்கர வாகனங்களிலோ நடந்தோ சொல்ல முடியாதபடிக்கு அனல்காற்று வீசி வருகி றது. இந்த வெப்பத்தின் தாக்கத்தை மக்கள் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்தும் வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே 24ம் தேதி வெப்பநிலை வீசும் என பொது மக்க ளுக்கு எச்சரிக்கை விடுத் தது போல், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் மீண்டும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திரு ப்பதாவது: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரம்பலூர், மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொது மக்கள் போதுமானஅளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவ சியத் தேவைகள் இன்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமா றும், வெயி லின் தாக்கத்தால் உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகு மாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் எனத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக மருத்துவர் கள் தெரிவிக்கையில், பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விலகி, எச்சரிக்கையாக, பாது காப்புடன் வீடுகளில் இருப்பதோடு, தேவையான அளவுக்கு தண்ணீர் பருகிக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக உடலுக்குத் தேவையான சத்துக்கள் தரக்கூடியதாக நீராகாரம், இளநீர், பழச்சாறுகள், எலு மிச்சை சர்பத் போன்ற வற்றை பருகிக் கொள்ள வேண்டும்.
உடலில் இருந்து வியர்வை எளிதாக வெளி வரும் படி பருத்தியினால் ஆன ஆடைகளை காற்றோட்டமாக அணிந்திருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். தலையில் அதி கம் முடி உள்ளவர்கள் எண் ணெய் வைத்துக் கொண்டு வெளியே செல்வது நல் லது. மேலும் கையோடு குடி நீர் பாட்டில்களை கொண்டு செல்வதும் நல்லது. குறிப் பாக சிறுவர்கள், முதியவர் கள் யாருடைய துணையும் இன்றி வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் போது வெளியில் நடமாட வேண்டாம். பெண்கள் குடைகளோடு செல்வது நல்லது. வெயில் பாதிப் பால் யாராவது மயங்கி விழுந்தால் அவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தி குணப்படுத்துவது நல்லது எனது தெரிவித்துள்ளனர்.
The post அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.