×

வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு: கடற்கரையும் களையிழந்தது வாக்குப்பெட்டிகளை பாதுகாக்கும் பாதுகாப்பு காவலர்களுக்கு பழச்சாறு, நீர்மோர் வழங்கல்

மயிலாடுதுறை, ஏப்.28: மாவட்ட காவல் எஸ்பி மீனா உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி பொறியியல் கல்லூரி மற்றும் ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு கோடைக்காலத்தில் பணியின்போது ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால், அவர்களின் நலன் கருதி பழச்சாறு மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தினமும் நண்பகல் வேலைகளில் பழச்சாறு மற்றும் நீர்மோர் வழங்கப்படவுள்ளது.

The post வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிப்பு: கடற்கரையும் களையிழந்தது வாக்குப்பெட்டிகளை பாதுகாக்கும் பாதுகாப்பு காவலர்களுக்கு பழச்சாறு, நீர்மோர் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,AVC College of Engineering ,AVC College of Arts and Science ,Mayladuthurai ,District Police ,SP Meena ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...