×

திண்டுக்கல்லில் மாநில மகளிர் கபடி போட்டி

திண்டுக்கல், ஏப்.28: திண்டுக்கல் மேட்டுப்பட்டி சோழன் பாய்ஸ் கபடி குழு சார்பில் மாநில அளவிலான முதலாம் ஆண்டு மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை, திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி தெய்வம் துவக்கி வைத்தார். போட்டியில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதலிடம் பெரும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் இடம் அணிக்கு ரூ.7000 மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5000 மற்றும் சுழற் கோப்பையும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5000 மற்றும் சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சோழன் பாய்ஸ் கபடி குழு தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ராஜாமணி செய்து இருந்தனர்.

The post திண்டுக்கல்லில் மாநில மகளிர் கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : State Women's Kabaddi Tournament ,Dindigul ,Dindigul Mettupatti Cholan Boys Kabaddi Team ,level women's kabaddi tournament ,Dindigul ADSP ,Madurai ,Trichy ,Coimbatore ,Sivagangai ,Tuticorin ,Dindigul State Women's Kabaddi Tournament ,Dinakaran ,
× RELATED மாநில பெண்கள் கபடி போட்டி ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்