×
Saravana Stores

அனைத்து அரசு பஸ்களையும் 48 மணிநேரத்தில் ஆய்வு செய்து பழுதுகளை சரிசெய்ய போக்குவரத்து துறை உத்தரவு

சென்னை: போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்து துறை, ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது. அதில் அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள், சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அனைத்து அரசு பஸ்களையும் 48 மணிநேரத்தில் ஆய்வு செய்து பழுதுகளை சரிசெய்ய போக்குவரத்து துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Transport department ,CHENNAI ,Chief Secretary ,Shivdas Meena ,Dinakaran ,
× RELATED மாநகரப் பேருந்துகளில் பொது...