×
Saravana Stores

பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல்


திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதைத்தொடர்ந்து கவர்னருக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஒரு சில மசோதாக்களில் மட்டும் கையெழுத்து போட்ட கவர்னர் ஆரிப் முகம்மது கான், சில மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

இது தவிர நிலப்பதிவு சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சட்டத் திருத்த மசோதா உள்பட 5 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் அவர் கிடப்பில் வைத்திருந்தார். இதனால் கவர்னரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த 5 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் நேற்று ஒப்புதல் அளித்தார்.

The post பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5 மசோதாக்களுக்கு கேரள கவர்னர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Kerala Governor ,Thiruvananthapuram ,Kerala government ,governor ,Arif Mohammed Khan ,Supreme Court ,
× RELATED கேரளா பஸ் – வாகனம் உரசல் கட்டிட தொழிலாளி படுகாயம்