×

ஆன்மீக அழைப்பு

பூர்வஜென்மம் பற்றிய உண்மைகளை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கும் வகையில் உருவாகியுள்ள படம், ‘ஆன்மீக அழைப்பு’. இதை ‘கீழக்காடு’, ‘பற்றவன்’ ஆகிய படங்களை தயாரித்தவரும், ‘கீழக்காடு’ படத்தை இயக்கியவருமான சத்யமூர்த்தி ஜெயகுரு, தனது சத்ய சுதா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விமானப் பணிப்பெண் சுபிக்‌ஷா ஹீரோயினாக நடிக்க, அவருடன் மேலும் 5 புதுமுகங்கள் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

சிக்கல் ராஜேஷ், ‘திரெளபதி’ கோபிநாத், ‘பொன்னியின் செல்வன்’ குதிரை வீரன் சதீஷ் வாரியர் வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும் ஆதேஷ் பாலா, துரை ராமச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். காந்தி ஒளிப்பதிவு செய்ய, எச்.முஹமது அசாருதீன் இசை அமைத்துள்ளார். சத்யமூர்த்தி ஜெயகுரு, ஜி.வி.ராஜன், பழனியப்பன் பாடல்கள் எழுதியுள்ளனர். நாடி ஜோதிடர் பாபு, இப்படத்தில் நாடி ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளார்.

Tags : Sathyamurthy Jayaguru ,
× RELATED யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்