×
Saravana Stores

கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை: தெற்கு ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகம், கேரளா தவிர்த்து, பிற மண்டலங்களுக்கும் கூட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு இவ்வாண்டு 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள் மட்டுமின்றி, இங்கிருந்து கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் பயணிகளுக்கு 239 சேவைகள் கிடைக்கும். அதன்படி சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களுக்கு பயணிகளின் வசதிக்காக தேர்தலையொட்டி சிறப்பு ரயில்களையும் அறிவித்து இயக்கியது.

இதைத்தவிர பல புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டு கோடைவிடுமுறையில் இந்தியா ழுழுவதும் மொத்தம் 6,369 சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,742 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுன்டர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும் பயணிகள் டிக்கெட் பெற்றுக்கொண்டு, கோடை கால சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Southern Railways ,Southern Railway ,Tamil Nadu ,Kerala ,
× RELATED புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி...