- மிக்ஜம்
- தமிழ்நாடு அரசு
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பாஜா ஊராட்சி
- புது தில்லி
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பஹியா அரசு
புதுடெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி கேட்டது. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி. இதன் மூலம் தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் சாடியுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,454 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல் டிசம்பர் மாத இறுதியில் தூத்துக்குடி, நெல்லையில் கடுமையான மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து தரப்பினரையும் புரட்டி போட்ட இந்த கன மழையால் ஏராளமான உயிர்ப்பலிகள் ஏற்பட்டன.
இந்த புயல், வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தேர்தல் பிரசாரங்களிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மழை, வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத ஒன்றிய அரசு என கடுமையாக சாடி வந்தார். இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ரூ.285 கோடி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அரசுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,498 கோடி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி நிதியும் விடுவித்துள்ளது. இதேபோல் கர்நாடக அரசும் வறட்சி நிவாரணம் கோரி வந்தது. கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி விடுவித்துள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் வறட்சி நிவாரண நிதி வழங்காமல் ஒன்றிய அரசு கர்நாடகாவை வஞ்சிப்பதாக குற்றஞ்சாட்டி வருகிறது. நேற்று கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடந்தது. எஞ்சிய 14 தொகுதிகளுக்கு மே 7ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, வறட்சி நிவாரண நிதி, ஜிஎஸ்டி நிதிப்பங்கீடு விவகாரங்களை முன்வைத்து பேசினார். பாஜ, கர்நாடகாவுக்கு காலி சொம்பை தருவதாக கூறினார். பாரதிய சொம்பு கட்சி என்று காங்கிரஸ் தொடர்ந்து பாஜவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசுக்கும் ஒன்றிய அரசு நிதியை விடுவித்துள்ளது. கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. புயல் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38 ஆயிரம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.285 கோடி. இதிலிருந்து தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எப்படி வஞ்சிக்கிறது என்பததை அறிய முடிகிறது. தொடர்ந்து பாஜ அரசு, தமிழ்நாட்டு அரசை வஞ்சிக்கிறது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளளனர்.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு appeared first on Dinakaran.