டெல்லி : இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. டெல்லியில் இறந்த ஒரு நபரின் 6 பிள்ளைகள் மற்றும் ஒரு பேத்தி ஆகியோர் சொத்து பிரிப்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், “உயிரிழந்த கணவன் சொத்தை இந்து மனைவி அனுபவிக்க முடியும். ஆனால் அந்த சொத்தை விற்கவோ அல்லது கைமாற்றவோ முடியாது.
கணவன் இறந்த பிறகு, வருமானம் இல்லாமல் இருக்கும் பெண்கள் கணவனின் சொத்தை அனுபவிக்கலாம். அதற்காக உரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பெண்களுக்கு வருமானம் இல்லாத நிலையில், அவர்கள் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாது என்பதால் இந்த உரிமை வழங்கப்படுகிறது. எனவே இந்த பெண்கள் அந்த சொத்துக்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும். ஆனால் விற்க முடியாது,”இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்.
The post இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை; சொத்தை அனுபவிக்கலாம், விற்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.