- மயிலாடுதுறை நீதிமன்றம்
- பாஜக
- தருமபுரம்
- அத்தீநாத்
- மயிலாடுதுறை
- தாருமாபுரம் அத்தீநாத்
- தருமபுரம்
- அடினா
- மடாதிபதி
- ஸ்ரீலஸ்ரீ மாசிலமணி
- தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார்
- தருமபுரம் ஆதினம்
- தின மலர்
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனுவை மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதின தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச விடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக வினோத், செந்தில், விக்னேஷ் மற்றும் உடந்தையாக இருந்ததாக செம்பனார்கோவிலை சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கொடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொடியரசு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்பு இருப்பதாகவும், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ் செல்வி, விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் ஜாமீன் வழங்க மறுத்து கொடியரசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அகோரம், குடியரசு ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலர் விக்னேஷ் ஆகியோர் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி விஜயகுமாரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜாமின் கோரிய வினோத், விக்னேஷ் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.