×
Saravana Stores

ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னையில் மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை – சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்காதது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம் ஆகியுள்ளது. 2021 ஆக.17-ல் பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. திட்டத்திற்காக ஒப்புதலை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பிரதமரிடம் வலியுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இதனிடையே மெட்ரோ ரயில் திட்டம் மாநில, ஒன்றிய அரசின் 50 : 50 நிதிப் பங்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் கிடைக்காத நிலையில் ஒன்றிய அரசு பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் திட்டம் முடியவுள்ள நிலையில் இதுவரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியில் இருந்து தமிழ்நாடு அரசு செலவினங்களை மேற்கொண்டு வருகிறது. .

The post ரூ.63,000 கோடி சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.1 கூட தராத ஒன்றிய அரசு.. மாநில நிதியில் செலவீனங்களை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.

Tags : EU government ,Government of Tamil Nadu ,Chennai ,Madhavaram Milk Farm ,Suruseri Chiphkat ,Kalangarai ,Poonthamalli Workshop ,Choshinganallur ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...