×
Saravana Stores

கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் ரூ.3454 கோடி வறட்சி நிவாரணமாக விடுவித்தது ஒன்றிய அரசு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் ரூ.3454 கோடி வறட்சி நிவாரணமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் கோரி காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் வறட்சி நிவாரணம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவுவதால் நிவாரணப் பணிகளுக்காக கர்நாடக அரசு ரூ.35,162 கோடி கோரியிருந்தது. உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு அணுகிய நிலையில் வறட்சி நிவாரண நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்த கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் ஒதுக்காததை கண்டித்து சொம்பை காட்டி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்திருந்தார். கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என்று தகவல் பரவிய நிலையில் நிவாரணம் விடுவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பாஜக பின்னடைவை சந்தித்ததால் வறட்சி நிவாரணம் விடுக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

The post கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணம் ரூ.3454 கோடி வறட்சி நிவாரணமாக விடுவித்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : EU Government ,Karnataka ,Bangalore ,Union Government ,Congress ,Dinakaran ,
× RELATED பூதாகரமாகும் மியூல் வங்கிக் கணக்கு...