×
Saravana Stores

திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஜெயங்கொண்டம், ஏப்.27: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில் அருகே கடந்த 18 நாட்களாக பாரதம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று பக்தர்கள் அக்னி கரகம் எடுத்து அருகாமையில் உள்ள நீர்நிலைக்கு சென்று வழிப்பட்டனர்.

தொடர்ந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று கோயில்களின் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

The post திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi Festival ,Draupadiyamman Temple ,Jayangondam ,Thirupathiyamman ,Keeemaalikai ,Senturai ,Ariyalur district ,Dirupadiyamman temple ,Dimiti festival ,
× RELATED ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 135...