- வராஹியம்மன் கோயில் கும்பபிசேகம்
- வேதாரண்யம்
- எலமராக்கடர் கோயில்
- நங்கயநல்லூர்
- வரஹி அம்மன்
- கும்பாபிஷேகம்
- யகசல பூஜை
- கணபதி பூஜா
- வாராஹி அம்மன் கோவில்
வேதாரண்யம், ஏப்.27: வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் பகுதியில் மேலமரைக்காடார் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு வடபுறம் புதிதாக வாராஹி அம்மனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜைளுடக் முதல் யாகசாலை பூஜை நடைபெற்று, தொடர்ந்து இரண்டாம்கால யாகசாலை பூஜைகளுடன், மகா பூர்ணாஹுதி நடைபெற்று சிறப்பு தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது.
மங்கல வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சப்தமாதாக்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடத்தப்பட்டது.இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.