×

செகப்பு சேலை

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் படம், ‘செகப்பு சேலை’. குறிப்பிட்ட ஒரு எல்லைப்பகுதியில் சிவப்புச்சேலை கட்டிக்கொண்டு வரும் ஹீரோயின், திடீரென்று மர்மமான முறையில் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. அத்தாக்குதலை நடத்துவது மனிதர்களா அல்லது அமானுஷ்ய ஆவிகளா? எதற்காக அவர் தாக்கப்படுகிறார் என்ற கருவை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

ஸ்ரீசுமன் வெங்கடாத்ரி புரொடக்‌ஷன் சார்பில் ஸ்ரீசுமன் கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக காருண்யா, உயிர் ஸ்ரீகாந்த், அய்யப்ப சர்மா, சுமன் ஷெட்டி, ஆலி, ரகுபாபு, அஜய், ஜீவா, பானுஸ்ரீ, கீதாசிங், பேபி தேஜஸ்ஸ்ரீ நடிக்கின்றனர். பிரமோத் இசை அமைக்க, விஜயமூர்த்தி வசனம் எழுதுகிறார். பெங்களூரு, ஐதராபாத் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்