×

அரசு மருத்துவமனையில் ஆபத்தான கழிவுநீர் தொட்டி

திருவாடானை, ஏப்.27: திருவாடானையில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனை முகப்பு பகுதியில் கழிவு நீர் தொட்டி ஒன்று பல ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு இருந்தது. தற்போது இந்த தொட்டி மேல் மூடியின்றி திறந்த வெளியில் அப்படியே பாதுகாப்பு இன்றி கிடக்கிறது.

இத்தொட்டியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு வரும் சிறிய குழந்தைகள், முதியவர்கள் கழிவுநீர் தொட்டி திறந்து கிடப்பது தெரியாமல் அடிக்கடி விழுந்து விடுகின்றனர். எனவே இந்த கழிவு நீர் தொட்டியை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post அரசு மருத்துவமனையில் ஆபத்தான கழிவுநீர் தொட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Government Taluk Head Hospital ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்