×

தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை, ஏப்.27: தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணி தொடங்க உள்ளதால், இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு மேட்லி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணி துவங்க உள்ளதால் இன்று முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் 26ம் ேதிதி வரையிலான ஓராண்டு காலத்திற்கு, மேட்லி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
 வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் சார்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
 பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி சந்திப்பு நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
 தி.நகர் நேருந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் 4வது பிரதான சாலை, சிஐடி நகர் 3வது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.
 சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாக சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வர ராவ் சாலை வழியாக உஸ்மான் சாலையை அடையலாம்.
 தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் சாலை சென்று வெங்கட் நாராயணா சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : South-North Osman Road ,T.Nagar Madli junction ,Police Department ,Chennai ,T.Nagar South Osman Road ,North Osman Road ,Madli Junction ,Chennai Metropolitan Traffic Police ,D. Nagar Madli ,Dinakaran ,
× RELATED சென்னையில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகம்!!