×
Saravana Stores

தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை

வேலூர், ஏப்.27: வேலூர் கோட்டையில் உள்ள தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி டிஆர்ஓவிடம் இந்து மகாசபாவினர் மனு அளித்தனர். அகிலபாரத இந்து மகாசபா கோட்ட பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையிலானவர்கள் நேற்று டிஆர்ஓவிடம் அளித்த மனுவில் கூறுகையில், ‘வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சித்ராபவுர்ணமி அன்று இரவு 8 மணிக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் இருந்தபோது, கோயில் நடையை மூடி, அன்னதானம் வழங்க கூடாது, விளக்கு ஏற்றக்கூடாது. நைவேத்தியம் செய்யக்கூடாது, பவுர்ணமி அன்று ஜலவலம் வரக்கூடாது என்று இடையூறு செய்கின்றனர். முதுநிலை பராமரிப்பு அலுவலர் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே இனி, எந்த இடையூறும் இல்லாமல் வழிபாடு செய்ய வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். முன்னதாக தொல்லியல் துறை அலுவலர் அகல்யாவை கண்டித்து இந்து மகாசபாவினர் காட்பாடி சித்தூர் பஸ்நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post தொல்லியல் துறை அலுவலர் மீது நடவடிக்கை கோரி மனு வேலூர் கோட்டை appeared first on Dinakaran.

Tags : Vellore Fort ,Vellore ,Hindu Mahasabha ,TRO ,Akila Bharata Hindu Mahasabha ,Srinivasan ,
× RELATED வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில்...