×

வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்

சேத்துப்பட்டு, ஏப்.27: சேத்துப்பட்டு மாதாமலைக்கு சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர். சேத்துப்பட்டு- வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்குணம் மாதாமலையில் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. தினமும் தமிழகம், ஆந்திரா, புதுவை உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கிறிஸ்தவர்கள் மாதாமலைக்கு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த சேட்டு(45), ரமேஷ்(44), ராஜா(38), புஷ்பா(40), ஆஷாமேரி(33), விபேகா(33), வேளாங்கண்ணன்(44), நிஷாந்த்குமார்(14) மற்றும் சிறு குழந்தைகளுடன் மாதாமலை மீதுள்ள மாதாவை தரிசிக்க வேனில் வந்தனர். அப்போது, வேன் திடீரென நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த 10 பேரும் சிறுகாயத்துடன் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர். அனைவரும் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

The post வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில் appeared first on Dinakaran.

Tags : Matamalai ,Chetupatta ,Nedungunam Matamalai ,Sethupattu-Vandavasi highway ,Tamil Nadu, Andhra Pradesh ,
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...