×

கோவை ராக்ஸ் பள்ளி மாணவர் உலக சாதனை

கோவை, ஏப்.27: கோவை ராக்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் எம். ஆத்விக் தன் நினைவாற்றலை பயன்படுத்தி 1 நிமிடம் 20 வினாடிகளில் 100 படங்களை அடையாளம் கண்டு உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனையை கலை வேர்ல்ட் ரெக்கார்ட், ஏசியன் ரெக்கார்டு அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த உலக சாதனைக்கான பாராட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் இந்தியா எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நீதிபதி ஆர் ரக்சிதா, ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி தூதர் மற்றும் மூத்த நீதிபதி செந்தில்குமார், இந்தியா ரெக்கார்ட் அகாடமி வெங்கடேஸ்வரன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூத்த பதிவு மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர் எம். ஆத்விக்கிற்கு விருதுகளை வழங்கினர்.

The post கோவை ராக்ஸ் பள்ளி மாணவர் உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore Rocks School ,Coimbatore ,M. Aadvik ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...