×

பவானி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி

மேட்டுப்பாளையம்,ஏப்.27:மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் சஞ்சய்(23). பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள உப்பு பள்ளம் பம்பர மடுவு கேஎம்கே தோட்டம் பின்புறமுள்ள பவானி ஆற்றில் தனது நண்பர்கள் விஜய்(21),சிவா(22),அக்‌ஷய்(23) ஆகியோருடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது,சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உடன் சென்ற நண்பர்கள் அவரை தண்ணீருக்குள் இறங்கி தேடியதோடு,அக்கம்பக்கத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் சுமார் அரைமணி நேரம் போராடி ஆற்றில் மூழ்கி பலியான சஞ்சயை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பவானி ஆற்றில் மூழ்கி பெயிண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Bhavani river ,Mettupalayam ,Pannari ,Gandhipuram 3rd Road, Mettupalayam ,Sanjay ,KMK garden ,Vijay ,Siva ,Akshay ,Painter ,Bali ,
× RELATED மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி...