விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகளையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசுகாரில் நேற்று வந்திருங்கிய ஒருவர் தனது இரண்டு கைகளில் தங்க பிரேஸ்லட், தங்கக் காப்பு, கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என 2.5 கிலோ தங்க நகைகளை ேபாட்டவாறு கீழே இறங்கினார். இதனை பார்த்து அங்கிருந்த போலீசார், ஊழியர்களும் வியப்படைந்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, கர்நாடக மாநிலம், சிமோகாவை சேர்ந்த ரெஜிமோன் (53) எனவும், தொழில் ரீதியாக காரில் புதுச்சேரி நோக்கிச் சென்றபோது, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்ததாக ₹68 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் உரிய ஆவணங்களை காட்டி அதனை வாங்கி செல்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் ரெஜிமோன், பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ₹68 ஆயிரம் தொகைக்கான ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை அளித்த நிலையில், தேர்தல் பிரிவு அலுவலர்கள் ரெஜிமோனிடம் அத்தொகையையும், அதற்குரிய சான்றுகளையும் வழங்கினர்.
The post 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக தங்கமகன்: விழுப்புரம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு appeared first on Dinakaran.