சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கோடை காலம் தொடங்கிய நிலையில், பூக்கள் சாகுபடி குறைந்து வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ அளவில், மல்லி ரூ.600, ஐஸ் மல்லி ரூ.500, ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.400, அரளி ரூ.250, சாமந்தி ரூ.260, சமபங்கி ரூ.150, பன்னீர்ரோஸ் ரூ.160, சாக்லேட் ரோஸ் ரூ.180 என அனைத்து வகையான பூக்களும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.700க்கு விற்பனையானது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத்தலைவர் முத்துராஜ் கூறுகையில், வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும், வழக்கம்போல் பூக்கள் விற்பனை அமோகமாக நடந்தது, என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் வரத்து குறைவு கனகாம்பரம் கிலோ ரூ.700க்கு விற்பனை appeared first on Dinakaran.