×

கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ

கொடைகானல்: கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 100 ஏக்கருக்கு மேலான பரப்பளவில் தீ பற்றியுள்ளது. புகை மண்டலமாக கொடைக்கானல் வனப்பகுதி காட்சியளிக்கிறது. தீயை ஆனைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் வனத்துறையும் ஈடுபட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் சில நாட்களாக கடும் வறட்சி நிலவி வருகிறது.

காய்ந்த சருகுகளில் தீப்பற்றி அடிக்கடி காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் அரிய வகை மரங்களும், தாவரங்களும் கருகி வருகின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு வருவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அவ்வப்போது காட்டு மாடுகள், மான்கள் நகர் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. இதில் நூற்றுக்கணக்கான மரங்களும், தாவரங்களும் தீயில் கருகின. வனத்துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கும் நிலையில் வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சில தினங்களாக கொடைக்கானல் பூம்பாறை வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி உள்ளிட்டவை பற்றி எரிந்தது. இங்குள்ள மரங்கள் , வனவிலங்குகள் காட்டு தீயால் பாதித்தன.

இதனிடையே தற்போது பூம்பாறை மன்னவனுார் மெயின் ரோட்டில் கூக்கால் பிரிவு இடையே காட்டு தீ கொளுந்து விட்டு எரிகிறது. இதன் மத்தியில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றன. வனத்துறையும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. நுாற்றுக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் எரிந்து சுற்றுச்சூழலும் பாதித்துள்ளது. தீயால் வன விலங்குகள் பட்டா நிலங்களில் தஞ்சமடைவதால் மனித, வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. தீயை ஆனைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ appeared first on Dinakaran.

Tags : Godaikanal ,Kodiakanal Forest ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கனமழை வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு