டெல்லி: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 2016 – 19 வரையிலான காலத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், கூடுதல் விசாரணை மேற்கொள்ள கோரி பிரிஜ் பூஷண் கோரிக்கையை டெல்லி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்தது விட்டது. மேலும், பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!! appeared first on Dinakaran.