×

உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய பொய்யன்.. இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது: ஜெயக்குமார் விமர்சனம்!!

காஞ்சிபுரம்: உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய பொய்யன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்டமாக விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் ஜெயக்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; ஒரு லட்சம் ஓட்டுகளை காணவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதாக குற்றம் சாட்டினார். உலகிலேயே அண்ணாமலை ஒரு மெகா பொய்யன் என்று விமர்சித்த அவர், கூச்சமே இல்லாமல் பொய் சொல்வதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது என்று தெரிவித்தார். இந்து, இஸ்லாமியர் என அனைத்து தரப்பினருமே வரி செலுத்தும் பொழுது மதத்தால் பிளவுப்படுத்தி அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற முயற்சிப்பது சரியில்லை என்றும் இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஆங்கிலேயர்களை போல பிரித்து ஆட்சி செய்யும் வேலையை பிரதமர் மோடி செய்வதாக குற்றச்சாட்டிய ஜெயக்குமார், இந்திய அரசு சட்டத்தின்படி அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் இருப்பதாக குறிப்பிட்டார்.

The post உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய பொய்யன்.. இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது: ஜெயக்குமார் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,PM ,Islamism ,Jayakumar ,Kanchipuram ,Former Minister ,Adimuka Pramukar Illa ,Kancheepuram ,
× RELATED செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை...