டெல்லி: மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் மின்னணு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இவ்வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் பின்வருமாறு..
*ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் முறையை தொடர வேண்டும்
*முடிவுகளை அறிவித்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும்
*ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சின்னத்துடன் பார் கோடு வைக்க முடியுமா என்பதை ஆராய வேண்டும்
*இயந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும்
*வாக்கு இயந்திரங்களை வைக்கும் ஸ்ட்ராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும்
*மைக்ரோ கண்ட்ரோலர் யூனிட்டில் பயன்படுத்தும் ‘சிப்’ பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்
The post ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய விவகாரம் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் என்னென்ன? appeared first on Dinakaran.