×
Saravana Stores

கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

நீலகிரி: கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் செய்துள்ளனர். இந்த நிலையில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கு தடையின்றி, அனைத்து தளங்களையும், பார்த்து ரசிக்க, இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையை கொண்டாடவும், கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாகவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகிறார்கள்.

கடந்தாண்டு கோடை சீசனில் 10 லட்சம் பேர் வருகை தந்தனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும். இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் ஊட்டிக்கு வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கோவை மற்றும் சமவெளிப் பகுதிகளிலிருந்து, உதகைக்கு வரும், அனைத்து வாகனங்களும் வந்து, குன்னூர் வழியாக வர வேண்டும் எனவும், உதகையிலிருந்து, கோவை, ஈரோடு உட்பட, சமவெளி பகுதிகளுக்கு செல்லக்கூடிய. அனைத்து வாகனங்களும் கோகத்கிரி முகப்பாதை வழியாக, வரவேண்டும். ஏப்ரல் 27,28 மற்றும் மே1ம் தேதி முதல் 31-ம்தேதி வரை ஒரு வழிபாதையாக, இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி தொடங்கியுள்ளதால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,District Superintendent of ,Utkai ,Nilgiri ,District ,Superintendent of Police ,Utaka ,Dinakaran ,
× RELATED நீலகிரி காலை நேரங்களில் பனி மூட்டம் குளிரால் ஊட்டி மக்கள் அவதி