×
Saravana Stores

கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிப்பு; வெறிச்சோடிய குடோன்கள்..விவசாயிகள் வேதனை..!!

சேலம்: சேலத்தில் மாம்பழ வரத்து குறைந்துள்ளதால் அங்குள்ள குடோன்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. சேலத்தில் விளையும் மல்கோவா மாம்பழம் மிகுந்த சுவை மிகுந்தது. அதுமட்டுமின்றி சேலம், பெங்களூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுச்சாலை, குண்டு, நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை, கடந்த 2 மாதங்களாக நீடிக்கும் கடும் வெயில் காரணமாக மா பிஞ்சிகள் காய்ந்து உதிர்ந்துவிட்டன. இதனாலும் பூச்சி தாக்குதல் மற்றும் பருவம் தவறிய மழையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து அடிக்கும் செலவுக்கு கூட மாம்பழ விளைச்சல் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நல்ல வரவேற்பு இருந்தும் போதிய மாம்பழ வரத்து இல்லாததால் வியாபாரம் முடங்கியுள்ளதாக வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

The post கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிப்பு; வெறிச்சோடிய குடோன்கள்..விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Dharmapuri ,Krishnagiri ,Theni ,
× RELATED தர்மபுரி அரசு மருத்துவமனை முன்...