- திருச்சி
- காளிதாஸ்
- இனம்புலையூர்
- தஞ்சூர் வேளாண்மை கல்லூரி
- ரஞ்சிதா
- ரோஷினி
- சாய் லட்சுமி
- ஷாலினி
- சிந்து
- சுஜிதா ஸ்ரீ
- சன்மதி
- சுமிபிரீதி
- ஸ்வேதா
- தாமரை
- திரிஷா
- வைதேஸ்வரி
திருச்சி, ஏப். 26: திருச்சி அடுத்த இனாம்புளலியூரை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி காளிதாஸ். இவரை தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகளான (ரஞ்சிதா, ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து, சுஜிதா ஸ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைத்தீஸ்வரி ஆகியோர் சந்தித்து இயற்கை வேளாண்மை பற்றி கேட்டறிந்தனர்.
அவரின் வயலில் நெல், மல்லிகை, சாமந்தி, முல்லை மற்றும் அவரை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். நுண்ணுயிர் உரங்களான சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், பிவேரியா பேசியானா,பச்சை மஸ்கார்டின் பூஞ்சை, வெர்டீசிலியம் லெக்கானி, பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ், சயனோபாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார்.
மேலும் அவர் இயற்கை முறையில் கற்பூர கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம், அரப்பு மோர் கரைசல், பூச்சி விரட்டி கரைசல், தேங்காய் பால் கரைசல் மற்றும் தேமோர் கரைசல் ஆகியவற்றை பூச்சி விரட்டிகளாகவும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் பயன்படுத்துகிறார். இதன்மூலமாக, இயற்கை முறையில் மல்லிகை சாகுபடியில் அதிக மகசூல் பெற்றுவருகிறார். மேலும் மாணவிகள் விவசாயி உடன் சென்று மல்லிகை தோட்டத்தில் உள்ள பூச்சி மற்றும் நோய் அறிகுறிகளை கண்டறிந்ததுடன் அதனை கட்டுப்படுத்த்தும் முறைகளை கேட்டறிந்தனர்.
The post திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு appeared first on Dinakaran.