×
Saravana Stores

வியாபாரி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அறிவுறுத்தல்

 

அறந்தாங்கி, ஏப்.26:அறந்தாங்கி அருகே வியாபாரி கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைகு செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நிர்வாகி போலீசாரிடம் அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலபட்டினதம் கிராமத்தை சேர்ந்த நைனா முகமது (45) இவர் மீமிசல் கடை வீதியில் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கடையை பூட்டி விட்டு வீடுக்கு பைக்கில் சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து மீமிசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக மீமிசல் காவல் நிலையத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் கபீர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கேட்டுகொண்டார்.

அதற்கு போலீசார் இந்த கொலை முன்விரோதம் காரணமா? தேர்தல் முன் தொடர்பான விரோதமா என கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம், இன்னும் 2 இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என போலீசார் கூறினர். இதைடுத்து ஹிமாயூன் கபூர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

The post வியாபாரி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Naina Mohammad ,Gopalapattinatham village ,Mimisal, Pudukottai district ,
× RELATED அறந்தாங்கியில் 5 பேரை தெரு நாய் கடித்து குதறியது