- பால்குடா திருவிழா
- ஐயனார்
- மதுரைவீரன் கோவில்
- பெரம்பலூர்
- அரியலூர் வீரகன்
- Jayankondam
- மல்யுத்தம் ஐயனார் மற்றும்
- வீரகன்
- அரியலூர்
- வீரகன்
- செந்தூரம், அரியலூர் மாவட்டம்
- மல்யுத்த ஐயனார்
- இண்டஹொயில்
- மதுரவீரன் கோயில்
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஏப்.26: அரியலூர் அருகே வீராக்கன் கிராமத்தில் உள்ள மல்யுத்த ஐயனார் மற்றும் மதுரைவீரன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள வீராக்கன் கிராமத்தில் மல்யுத்த ஐயனார், மதுரைவீரன் ஆலயம் உள்ளது. இந்தகோயிலில் மல்யுத்த ஐயனார் மற்றும் மதுரைவீரன், கருப்பணசாமிகள், மாரிய ம்மன், பாப்பாத்தி அம்மன், சப்த கன்னிகள், பாப்பாத்தி அம்மன், வீரனார் கருப்பு ஆகிய தெய்வங்கள் உள்ளன.
இங்கு, ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறும்.கடந்த 22 ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலாவுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு சம்பூர்ண அரிச்சந்திரா நாடகம் நடைபெற்றது.நேற்று நான்காம் நாள் பால்குட திருவிழா நடைபெற்றது.
செவ்வாடை அணிந்த பக்தர்கள் சின்னேரிக்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம் எடுத்தும் மற்றும் சக்தி கரகங்கள் ஏந்தியும்ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன் கிராமத்தில் ஐயனார், மதுரைவீரன் கோயிலில் பால்குட திருவிழா appeared first on Dinakaran.