×

அரணாரையில் 80 வயது மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி

 

பெரம்பலூர்,ஏப்.26: அரணாரையில் 80 வயது மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் செங்கமலை மனைவி காசியம்மாள் (80). இவரது கணவர் 15 வருடங் களுக்கு முன்பே இறந்து விட்டார். காசியம்மாள் தனது மகன்அசோக்குடன் வசித்து வந்தார். அசோக் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் காசியம்மாள் நேற்று மதியம் 3 மணிக்கு தனது வீட்டில் இருந்து பெரம்பலூருக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். அரணாரையைச் சேர்ந்த தங்கராசு மகன் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே ஷேர்ஆட்டோ வந்தவுடன் திடீரென மூதாட்டி தனது பர்சை வீட்டிலேயே மறந்து வைத்துவிட் டதாககூறி ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளார். இந்நிலையில் கிணற்றின் வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை பார்த்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது காசியம்மாள் என்பது உறுதி செய் யப்பட்டது. இதனையடுத்து காசியம்மாளின் சடலத்தை அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, காசியம் மாள் இறப்புகுறித்து விசா ரணை செய்து வருகின்ற னர். காசியம்மாள் கிணற் றில் கை,கால் கழுவுவதற்கு இறங்கும் பொழுது தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

The post அரணாரையில் 80 வயது மூதாட்டி கிணற்றில் விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Aranarai ,Perambalur ,Chengamalai ,Kasiyammal ,Tiruvalluvar Street, Aranarai ,Municipality ,
× RELATED பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தில் முறைகேடாக மது விற்ற நபர் கைது