×

கடந்த வாரம் அதிகரித்து இருந்த மல்லிகை கிலோ ரூ.400க்கு விற்பனை

மதுரை, ஏப். 26: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சித்திரை திருவிழா காரணமாக மதுரையில் கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை உச்சத்தை எட்டியிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் எலியார்பத்தி, வலையங்குளம், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, வத்தலகுண்டு பகுதிகளிலும் மல்லிகை சாகுபடி அதிகம் நடக்கிறது. இப்பகுதிகளில் தற்போது விளைச்சல் அதிகரித்து இருப்பதால், மதுரை பூ மார்க்கெட்டிற்கு தினமும் 50 டன்னுக்கு மேல் மல்லிக்கை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதற்கிடையே மீனாட்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் திருவிழா காரணமாக கடந்த ஒரு வாரமாக கிலோ ரூ.1000க்கும் மேல் விற்பனையான மல்லிகைப் பூவின் விலை நேற்று குறைந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது. இதன்படி ஒரு கிலோ முல்லை பூ ரூ.200, செண்டு மல்லி ரூ.80, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.150க்கு விற்பனையானது. இதன்படி கிலோ ரூ.400க்கு விற்பனையானது. விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கடந்த வாரம் அதிகரித்து இருந்த மல்லிகை கிலோ ரூ.400க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Jasmine ,Madurai ,Madurai Mattuthavani ,Chitrai festival ,Dinakaran ,
× RELATED தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை...