×

திண்டுக்கல் மாநகராட்சியில் ஏப்.30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

திண்டுக்கல், ஏப். 26: திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024-2025ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும். மேலும் வரும் 30.4.2024ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாநகராட்சியில் ஏப்.30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Tags : Dindigul Corporation ,Dindigul ,Commissioner ,Ravichandran ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு