- படுஜோர் செப்புலியூர்
- மயலதுதரா
- மாவட்ட கலெக்டர்
- மகாபாரதி
- தலைமை நீர்ப்பாசன ஆலை
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
- மயிலாடுதாரா வட்டம் சீப்புலியூர் கிராமம்
- படுஜோர் செப்புலியூர் கிராமம்
- தின மலர்
மயிலாடுதுறை, ஏப்.26: மயிலாடுதுறை வட்டம் சீப்புலியூர் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்றும் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பிரதான நீரேற்று குழாய் மற்றும் கிளை நீரேற்று குழாய் மூலம் மேற்கண்ட 610 குடியிருப்புகளில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டிகளின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக சுமார் 3,39,023 மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
முன்னதாக, மயிலாடுதுறை வட்டம் கடலங்குடி கிராமத்தில் தெற்கு ராஜன் வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமான பணிகளின்போது சேதமடைந்த கொள்ளிடம் கூட்டு குடிநீர்த்திட்ட குழாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஷபீர் ஆலம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.
The post கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர், நுங்கு, குளிர்பானம் விற்பனை படுஜோர் சீப்புலியூர் கிராமத்தில் நீரேற்று நிலைய செயல்பாடு: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.