×

ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது

புவனகிரி: கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மேல்புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர்உசேன்(38). இவர் அதே பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று புவனகிரி அருகே உள்ள தெற்குத்திட்டை பகுதியை சேர்ந்த பாமக புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுருளிராஜன்(31) என்பவர் ஜாகிர்உசேன் ஓட்டலில் நூடுல்ஸ் மற்றும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சுருளிராஜனிடம் ஜாகிர்உசேன் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுருளிராஜன், ஜாகிர்உசேனை திட்டி கொலை மிரட்டலும் விடுத்தார். புகாரின் பேரில் சுருளிராஜனை போலீசார் கைது செய்தனர்.

The post ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Pamaka ,Bhubanagiri ,Zakir Hussain ,Melbhubanagiri ,Cuddalore district ,East Union ,Surulirajan ,South Bhuvanagiri ,Bhuvanagiri ,Zakirusen ,
× RELATED பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு..!!