×

அகிலேஷ் வேட்பு மனு தாக்கல்

கன்னோஜ்: உத்தரப்பிரதேசத்தில் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் திங்களன்று தேஜ் பிரதாப் யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கன்னோஜ் தொகுதி வேட்பாளர் தேர்வு முடிவை சமாஜ்வாதி மாற்றிக்கொண்டது. இதனை தொடர்ந்து இங்கு அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று நேற்று முன்தினம் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் அப்போது உடன் இருந்தனர்.

The post அகிலேஷ் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Akhilesh ,Tej Pratap Yadav ,Samajwadi Party ,Kannaj ,Uttar Pradesh ,Akhilesh Yadav ,Dinakaran ,
× RELATED முடிவை மாற்றிய சமாஜ்வாடி கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி