×

அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்

சென்னை: தமிழகத்தில் சென்னை விமான நிலையம் முக்கிய விமான நிலையமாக உள்ளது. சர்வதேச நாடுகளுக்கும், உள்நாடுகளுக்கும் பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் மும்பை, டெல்லி போன்ற மாநிலங்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளது. சென்னை விமான நிலையம் நடப்பாண்டில் 2.12 கோடி பயணிகளை கையாண்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 14.2 சதவீதம் கூடுதலாகும் என்றனர். பெங்களூரு போன்ற பெரிய விமான நிலையங்களை பின்னுக்கு தள்ளி சென்னை விமான நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன்...