×
Saravana Stores

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர வானம்: புழுதிப்புயல் சூழ்ந்ததே காரணம் என நாசா விளக்கம்

ஏதென்ஸ்: ஐரோப்பா கண்டத்தின் முக்கியமான நாடுகளில் ஒன்று கிரீஸ். இதன் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு வரலாற்று சிறப்புகளுக்கு பெயர் போன ஏதென்ஸ் நகரம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக விளங்குகிறது. இந்நிலையில் ஏதென்ஸ் நகர வானம் நேற்று முன்தினம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது. இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர். இதுகுறித்து அமெரிக்காவின் நாசா விளக்கம் அளித்துள்ளது. அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வழக்கம். இந்த மேக கூட்டத்துடன் சகாரா பாலைவனத்தின் புழுதி மண் துகள்கள் கலந்ததால் மேக கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளன. இந்த ஆரஞ்சு நிற வானம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர வானம்: புழுதிப்புயல் சூழ்ந்ததே காரணம் என நாசா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Athens ,NASA ,Greece ,Dinakaran ,
× RELATED ஏதென்ஸை விட பழமையானது மதுரை எனக் கூற வேண்டும்: தலைமை நீதிபதி