×
Saravana Stores

விபத்தில் 2 மாணவர்கள் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமம் முருகன்நகரைச் சேர்ந்தவர் ராஜா. கொத்தனார். இவரது மகன் நித்திஷ் (14). 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதேகிராமம் மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோகுல் (13). 8ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நேற்று காலை 11.15 மணியளவில் நித்திஷ், கோகுலுடன் பெரம்பூரில் உள்ள தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன்நகர் ஆர்ச் அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது ேமாதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதில், பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post விபத்தில் 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Murugannagar ,Kaulpalayam village ,Perambalur district ,Mason ,Nitish ,Shekhar ,Gokul ,West Street ,
× RELATED எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு