×

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நியாய விலை கடைகள் மூலம் சுமார் 10,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணைய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிலிண்டர் பயன்படுத்தாதவர்கள் ஒரு சிலிண்டர் மட்டும் பயன்படுத்துவோருக்கு இரண்டு லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. இது தற்போது படிப்படியாக அரை லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழக்கம்போல் மண்ணெண்ணைய் வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்றனர். ஊழியர்கள் மண்ணெண்ணைய் போதிய இருப்பதில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அரை லிட்டர் மண்ணெண்ணைய் கூட கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது; 2021இல் 8,500 கிலோ லிட்டர் வழங்கப்பட்ட நிலையில் 2022ஆம் ஆண்டில் 4,500 கிலோ லிட்டராக குறைப்பு தற்போது 2,300 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியாத்தத்தில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

The post தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணையை ஒன்றிய அரசு 2,300 கிலோ லிட்டராக குறைத்துள்ளது: அமைச்சர் சக்கரபாணி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Minister Chakrapani ,Vellore ,Fair Price Shops ,Vellore district ,Minister ,Chakrapani ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...