×

காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கடிதம் அளித்தார் ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான்

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதத்தை நடிகர் மன்சூர் அலிகான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடன் கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும் , நடிகருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வ பெருந்தகையிடம் கடிதம் அளித்துள்ளார். பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன் . முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணையுள்ளேன்.

இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க முடிவு எடுத்துள்ளேன். பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி விஷ பாம்பு விட அதிகமாக இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்குகிறார். மதகலவரத்தை உண்டு பண்ணி மணிப்பூரில் செய்ததை போலவும் , குஜராத்தில் செய்ததை போலவும் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கால் தூசி கூட மோடி ஈடாக மாட்டார். மத கலவரத்தை தூண்ட நினைத்த மோடியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது. தேர்தல் முடிவுக்கு பின்னர் மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

The post காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கடிதம் அளித்தார் ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் appeared first on Dinakaran.

Tags : Democratic Tigers Party ,Mansoor Ali Khan ,president ,Selvaperundhai ,Congress party ,CHENNAI ,Tamil Nadu ,Congress ,Selvaperunthakaidan ,Democratic Tigers of India ,
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!