- சுவாமிமலை
- சுவாமிநாத சுவாமி கோயில்
- Kolakalam
- கும்பகோணம்
- சுவாமிநாதர்
- சுவாமி
- கோவில்
- சித்ரா பெருந்திருவிழா
- சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
- கும்பகோணம், தஞ்சை மாவட்டம்
- முருகன்
- அய்யனார் சுவாமிநாதசுவாமி கோயில்
- Kolagalam
கும்பகோணம்: சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது.முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா பத்து நாட்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி பட்டு உடுத்தி சிறப்பு மலர் அலங்காரத்துடன், சித்திரை தேருக்கு எழுந்தருள, அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத்தொடர்ந்து சிதறு தேங்காய் உடைத்து 9 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவினை முன்னிட்டு கோயில் மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு இன்று காலை விசேஷ அபிஷேகம் நடந்தது. மாலை தங்ககவசம், வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து நாளை நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 27ம் தேதி சுவாமிகள் புறப்பாடு விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நடைபெறுகிறது.
The post சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.