டெல்லி: இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க அறிவித்த வங்கி கோடாக் மஹிந்திரா வங்கி. மேலும், ஆன்லைன் மூலமாகவே புதிய வங்கி கணக்குகளை தொடங்கலாம் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தி அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை அதிகப்படுத்தியது கோடாக் மஹிந்திரா வங்கி. 811 என்ற மொபைல் நம்பருக்கு கால் செய்தால் போதும் உடனடியாக ஆன்லைன் மூலமாகவே வாடிக்கையாளர்களின் KYC எனப்படும் சுயசரிபார்ப்பு விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நிறைவு பெற்று விடும். இதே வழியில் ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டு சேவைகள் வழங்கப்பட்டு விடும்.
இப்படியான விரைவான வளர்ச்சியை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறியும், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை கோடாக் மஹிந்திரா வங்கி மீறியதாகவும் கூறி ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கோடாக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாகவே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், ஆன்லைன் மூலம் புதிய கிரெடிட் கார்டு வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆன்லைன் மூலமாக இவ்வாறு விரைவாக பணிகளை மேற்கொள்வது, பாதுகாப்பற்ற கடன் சுமைகளையும் வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இப்படியான தடை சம்பவம் கோடாக் மஹிந்திரா வங்கி மீது விதிக்கப்பட்ட பிறகு, இன்று அதன் பங்குகளில் பாதிப்பு இருக்கு என எதிர்பார்த்தது போலவே, இன்று (வியாழக்கிழமை) கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் பெருமளவில் சரிந்துள்ளன. இன்று 10% அளவுக்கு கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் சரிந்துள்ளன. தற்போது வங்கியின் ஒரு பங்கின் விலை ரூபாய் 1,658.70ஆக உள்ளது. கோடாக் மஹிந்திரா வங்கி மீதான தடை பற்றிய பகுப்பாய்வு நடவடிக்கை முடிந்த பின்னர் மீண்டும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு கோடாக் மஹிந்திரா வங்கியின் தடை செய்யப்பட்ட சேவைகள்தொடரலாம் என்றும், ஏற்கனவே வங்கி மூலம் செயல்படுத்தி வரும் பழைய சேவைகள் அப்படியே தொடரும் என்றும் கூறப்படுகிறது.
The post ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு appeared first on Dinakaran.